இந்தியாவில் முதலிடம் பிடித்த பேஸ்புக்!
நடப்பாண்டில் பேஸ்புக் செயலியை அதிகமாக தரவிறக்கம் செய்துள்ள உலக நாடுகளின் பட்டியில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் முக்கியமான செயலியாக பேஸ்புக் உள்ளது. பெரும் பொழுதுபோக்கு செயலியாக பார்க்கப்படும் பேஸ்புக் செயலில் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் பயனர்கள் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பாண்டில் உலகளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கேமிங் அல்லாத செயலிகள் பிரிவில் டிக்டாக் செயலியை 5.8 கோடிப்பேர் டவுன்லோட் செய்துள்ளது. அதற்கடுத்து ஃபேஸ்புக் செயலியை சுமார் 5.6 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இதற்கடுத்த இடங்களில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகள் இடம்பெற்றுள்ளன. இதே பட்டியலில், டாப் 10 லிஸ்டில் ஸ்னாப் சாட், ஜோஷ், டெலிகிராம் மற்றும் கேப்டட் உள்ளிட்ட செயலிகள் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள செயலிகளின் பட்டியலில் பேஸ்புக முதலிடம் பிடித்துள்ளது.