அடுத்த தலைமுறை கட்டுமானம் இப்படி தான் இருக்கும்!

வீடு கட்டுவதற்கு முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கிறது. பரிசோதனைகளாகவே இந்த முயற்சிகள் இருந்தன, ஆனால், தற்போது ஆடம்பர வீடுகளைக் கட்டவும் முப்பரிமாண அச்சு உத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில், ஐகான் என்ற முப்பரிமாண கட்டிட அச்சு இயந்திர நிறுவனம் உள்ளது. இது, சில கட்டுமான அமைப்புகளுடன் சேர்ந்து 1,000 முதல் 2 ஆயிரம் சதுர அடியில், தரைத் தளம் மற்றும் ஒரு மாடி உள்ள வீடுகளை கட்டித் தரத் தொடங்கி உள்ளது.

இதில் தரைத்தளத்தை, ஐகான் நிறுவனம் தனது ‘வல்கன்’ என்ற முப்பரிமாண கட்டிட அச்சியந்திரத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் அச்சிட்டுவிடுகிறது. அதன் பிறகு, முதல் மாடியை மரத்தால் ஆன கட்டுமானமாக உருவாக்குகின்றனர். இதுவும் விரைவிலேயே செய்து முடிக்கப்படுவதால், விரைவில், ஆடம்பர வீடு வேண்டுவோர், இத் திட்டத்தை விரும்புவர் என ஐகான் எதிர்பார்க்கிறது.  ஆனால் விலையக் கேட்டால் உங்களுக்கு தலைசுற்றல் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஒரு வீடு ரூ.3.30 கோடி வரை விலை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *