இந்திய அளவில் 2ம் இடம் பிடித்த மதுரை விமான நிலையம்!

வாடிக்கையாளர்களின் திருப்தியில் மதுரை விமான நிலையம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விமான நிலையங்கள் என்ற அடிப்படையில் மதுரை விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாட்டிலேயே வாடிக்கையாளர்களின் திருப்தியில் உதய்ப்பூர் விமான நிலையம் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.